🌹🌹✒ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் யுக முடிவு (கியாமத்) நாளின் சமீபத்தில் 72 அடையாளங்கள் வரும்…(அவை)
📌1.தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
📌2.அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.
📌3.வட்டியைச் சாப்பிடுவார்கள்.
📌4.பொய்யை (ஹலாலாக) ஆகுமாக்கி விடுவார்கள். அதாவது பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
📌5.கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
📌6.உலக ஆதாயங் களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
📌7.இலேசன விஷயத்திற் கெல்லாம் கொலை செய்வார்கள்.
📌8.உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
📌9.தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
📌10.பொய் உண்மையாகும்.
📌11.ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
📌12.அநீதி பெருகிவிடும்.
📌13.விவாகரத்து (தலாக்) அதிகமாகிவிடும்.
📌14.திடீர் மரணம் அதிகமாகிவிடும்.
📌15.மோசடிக் காரர்களை மக்கள் நம்பிக்கை யாளர்கள் என நினைப்பார்கள்.
📌16.நம்பிக்கை யாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
📌17.பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
📌18.மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
📌19.அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகிவிடும்.
📌20.மழை பொழியாது.
📌21.குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
📌22.தகுதி குறைந்தவர்கள் உயர்ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
📌23.கண்ணியத்திற் குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
📌24.தலைவர்களும், மந்திரிகளும், பொய்யர்களாக இருப்பார்கள்.
📌25.நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
📌26.பொறுமை யாளர்கள் அநீதம் புரிவார்கள்.
📌27.குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
📌28.மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
📌29.இவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும் அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களைவிட மிக மோசமானதாக இருக்கும்.
📌30.விஷத்தை விட கசப்பான தாகவே இருக்கும்.
📌31.தங்க பயன்பாட்டில் இருக்கும்.
📌32. வெள்ளி (பயன்படுத்துதல்) குறைந்து விடும்.
📌33.பாவமான செயல்கள் அதிகமாகிவிடும்.
📌34.பாதுகாப்பு குறைந்துவிடும்.
📌35.குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப் படும்.
📌36.பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப் படும்.
📌37.மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
📌38 மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
📌39.மதுபானங்கள் அருந்தப் படும்.
📌40.குற்றங்களுக் குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப் படாது.
📌41. அடிமைபெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள்.
(அதாவது பெண்மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழிநடத்துவார்கள்)…
📌42.செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
📌43.கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
📌44.ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
📌45.பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
📌46.அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
📌47.முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
📌48.அறிமுகம் உள்ள வர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
📌49.தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
📌50.மறுமையுடைய செயலைச் செய்து உலகத்தை சம்பாதிப்பார்கள்.
📌51.கனீமத் பொருட்களை தங்கள் தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்து வார்கள்.
📌52.அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்) பொருளைப் போன்று எடுத்துக் கொள்வார்கள்.
📌53.ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
📌54.கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
📌55.மகன் தந்தையை நோவினை செய்வான்.
📌56.தனது தாயை வெறுத்து விடுவான்.
📌57.தனது நண்பனுக்கு கேடுசெய்வான்.
📌58.கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான்.
📌59.தீயவர்களின் சப்தம் பள்ளிவாசல்களில் அதிகமாகிவிடும்.
📌60.பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப் படுவார்கள்.
📌61.இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
📌62.நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
📌63.அக்கிரமம் செய்வதைப் பெருமையாகக் கருதுவார்கள்.
📌64.மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
📌65.காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
📌66.இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
📌67.விலங்கினங் களின் தோலைப் பயன்படுத்து வார்கள்.
📌68.பிற்காலத்தவர் முற்காலத் தவர்களைத் திட்டுவார்கள், சாபமிடுவார்கள், பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இத்தகைய பாவங்கள் ஏற்படும் போது எதிர் பாருங்கள்.
📌69.சிகப்பு சூறாவளி காற்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வீசும்.
📌70.பூகம்பம் ஏற்படும்.
📌71.வானத்திலிருந்து
கல்மாரி பொழியும்.
📌72. மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப் படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும். 🌹🌹
📝அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி)
📔ஆதரநூல்கள் : -துர்ருல் மன்சூர்.