1⃣ வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை
2⃣ வணக்கசாலிகள், சிரமமான வாழ்க்கை
3⃣ பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை
4⃣ பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை
👉 இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால்
அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்
*مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ *
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 16:97)
👉 நீங்கள் நான்காவது நபராக இருந்தால்
அதுவும் இயல்பான ஒன்று தான்.
பாவம் செய்பவருக்கு உடனுடக்குடன் தண்டனை.
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்;
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)
👉 நீங்கள் இரண்டாவது வகை நபராக வணக்கசாலியாக இருந்தும் சிரமமான வாழ்க்கையாக இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
🔖 ஒன்று அல்லாஹ் உங்களை நேசித்து உங்களை சோதிப்பதின் மூலம் உங்களின் அந்தஸ்த்தை உயர்த்த நாடியிருக்கலாம்.
அல்லாஹ் சொல்கிறான்;
*وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ *
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)
🔖 அல்லது, உங்கள் வணக்கங்களில் குறைபாடு ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அல்லது ஏதேனும் பாவமான காரியங்களில் ஈடுபட்டு அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருந்தால் உங்களை தன் பால் தவ்பா செய்து ஈர்க்க அல்லாஹ் செய்யும் ஏற்பாடாக உங்களுக்கு துன்பத்தைத் தரலாம்.
அல்லாஹ் சொல்கிறான்;
*وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ *
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
(அல்குர்ஆன் : 32:21)
👉 நீங்கள் மூன்றாவது நபராக பாவங்கள் பல செய்தும் இவ்வுலக வாழ்க்கை மேலும் மேலும் இன்பகரமான வாழ்க்கையாக இருந்தால்
என் அன்புச்சகோதரரே! எச்சரிக்கை,எச்சரிக்கை
இது மெது,மெதுவாக உங்களை அழிவின் பால் இட்டுச்செல்லும் தூண்டிலாக இருக்கலாம். நிரம்பவும் ஆபத்தான வாழ்க்கை இது.
அல்லாஹ் சொல்கிறான்;
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 6:44)
விழித்துக்கொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம்மை காப்பானாக! என்றென்றும் அவனுக்கு நன்றியுள்ள நல்லடியாராக வாழ வைப்பானாக! ஆமீன்.